1
காரிமங்கலம்
காரிமங்கலம் வரலாற்றுச்சிறப்பு:
காரிமங்கலம் எனும்பெயர் தகடூர் ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி காலத்தில் காரிமலையமான் திருமுடிக்காரி என்னும் அரசன் படை நிறுத்திய இடம் பிற்காலத்தில் காரிமங்கலம் எனப் பெயர்க் கொள்ளலாயிற்று என்பர். மங்கலம்,பாடி போன்ற சொற்கள் படைநிறுத்திய இடங்களைக் குறிப்பதாகும்.
இவ்வூர் தகடூர் நாட்டின் ஒரு உட்பிரிவு நாடான கோவூர் நாட்டில் அடங்கிய ஒரு பகுதி
இவ்வூர்ப் பழம்பெருமையைச் சொல்லும் கல்வெட்டுகள் இவ்வூரை “கோவூர் நாட்டு காரிமங்கலத்து” எனக் குறிக்கின்றன.
சிந்தல்பாடியில் இருக்கும் நடுகல்லொன்றில் கோவூர் நாட்டு காரிமங்கலங் “கங்கஅதி அரைசரசரோடு தொறுக்கொள்ள” ஆநிரை கவர்தல் நடைபெற்ற போரி வீரனொருவன்இறந்ததைக்குறிக்கிறது.
இந்த நடுகல் காலம் 6-ம் நூற்றாண்டு, பல்லவ மகேந்திரவர்மர் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்ததையும் குறிக்கிறது.
அதேபோல கதிரம்பட்டி நடுகல்லும் கோவூர்நாட்டு காரிமங்கலத்து குளவர் மக்கள் வீரர் இருவர் தொறுக் கொள்ளலில் இறந்த செய்தியைக் குறிக்கிறது. இந்நடுகல் இரண்டாம் மகேந்திரன் ஆட்சியாண்டில் எடுக்கப்பட்டதாகும்
2
தகடூர் அதியமான் காலம் கிபி ஒன்று மற்றும் இரண்டாம் நூற்றாண்டு என்பர். ஆயிரத்தென்னூறு ஆண்டுகளாக “காரிமங்கலம்” எனும் பெயர் மாறாமல் கொண்டுள்ள ஊர் இது என்பது பெருமை கொள்ளத்தக்கது.
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
காரிமங்கலம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. சுமார் 3 சதுர கிலோ மீட்டர்
சுற்றளவுள்ளது காரிமங்கலம் பேரூராட்சியாகும். இவற்றில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சிக்குட்பட்ட
பகுதிகளில் ஓட்டல்கள், தனியார், அரசு மருத்துவமனைகள், காய்கறி சந்தை, திருமண மண்டபங்கள்
மற்றும் குடியிருப்புகள்,
வீடு
கரியமங்கலம் மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 57%, பெண்களின் கல்வியறிவு 49%
ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. கரியமங்கலம்
காரிமங்கலம் வட்டம், தமிழ்நாட்டின் தர்மபுரி
மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டம், தருமபுரி மாவட்டத்தின் பாலக்கோடு மற்றும் அரூர் வட்டங்களைச் சீரமைத்து
பிரித்து, காரிமங்கலம் பேரூராட்சியைத் தலைமையிடமாகக் கொண்டு 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் நாள்
உருவாக்கப்பட்டது. இந்த வட்டத்தின் கீழ் 52 வருவாய் கிராமங்கள் உள்ளன
3
காரிமங்கலம் அருணேசுவரர் கோயில்
காரிமங்கலம் அருணேசுவரர் கோயில் என்பது தர்மபுரி
மாவட்டம், காரிமங்கலத்தில் உள்ள சிவன் கோயிலாகும். இது காரிமங்கலத்தில் ஒரு
சிறு குன்றின் மீது அமைந்துள்ளதுகோயிலுக்குச் செல்ல குன்றுக்கு படிக்கட்டுகளும், சிமெண்டு சாலையும் உள்ளன.
கோயிலின் வரலாறு
இக்கோயிலின் இறைவன் ஆரணீசுவரமுடையார் என கல்வெட்டுகளில்
அழைக்கப்பட்டுகிறார். இக்கோயிலின் பழமையான கல்வெட்டு என்றால் அது 11 ஆம் நூற்றாண்டைச்
சேர்ந்த தெளிவற்ற கன்னடக் கல்வெட்டாகும். இந்தக் கோயிலின் கோபுரம் 1898 இல் இராமசெட்டி
என்பவரால் புதுப்பிக்கப்பட்டது.
இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. திருவுண்ணாழி, இடைநாழி, மகாமண்டபம், முன்மண்டபம், திருமண மண்டபம், வேள்வி மண்டபம்
ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அம்மன் கோயில் கோயிலின்
வடமேற்கே அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் தெற்கு நோக்கி இராச கோபுரம் ஐந்து நிலைகளுடன்
உள்ளது.
5
சிறப்புகள்:
குன்றின்இறைவன்:ஆருணேசுவரர்(எ) ஆரண்யேசுவரர்இறைவி:உண்ணாமுலை, அபீதகுஜாம்பிகை
உச்சியில் கோவில். ஜெய்னூர் கிராமத்தில் வசித்த
ஜைனர்கள் சைவ மதத்தை
எதிர்க்க அவர்களிடம் போரிட வந்த குலோத்துங்க சோழன் தான் கனவு கண்டமாதிரியே போரில் வெற்றி
பெற்று இந்த இடத்தில் ஓர் சிவாலயம் அமைக்க இடம் தேடியபோது புதரிலிருந்து
வெளிப்பட்ட லிங்கம்-ஆரண்யத்தில் கோவில் கொண்டதால் ஆரணேஸ்வரர். அரச
மரத்தடியில் நாகர்கள்.
அரசினர் கலைக்கல்லூரி
அரசினர் கலைக்கல்லூரி, காரிமங்கலம் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் செயல்பட்டுவரும் தமிழக
அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரியாகும்.
காரிமங்கலம் கிருஷ்ணகிரி சாலையில் சஞ்சீவிராயன் மலையில்
ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த மலை மேல் ஏராளமான குரங்குகள் உள்ளன.
காரிமங்கலம் சிறப்பு
மாண்புமிகு. கே.பி.அன்பழகன்B.Sc.,MLA
உயர்கல்வித் துறை அமைச்சர், எங்க ஊர்காரர்
மாண்புமிகு. கே.பி.அன்பழகன்B.Sc.,MLA
உயர்கல்வித் துறை அமைச்சர், எங்க ஊர்காரர்
6
காரிமங்கலம்
எங்க ஊர்ல
ஜல்லிக்கட்டு
காரிமங்கலத்தில் 18 பட்டியும் ‘’செவிட்டு ராமசாமி கோவில் ‘’ சார்பாக.. ஜல்லிக்கட்டு
குலோத்துங்க சோழனால் காரிமங்கலம் ஒட்டிய சிறு குன்றில் எடுக்கப்பட்ட “ஆருனேஸ்வரர் கோவிலும், பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட ஆட்சியாளர் ஒருவராகிய செவிட்டு ராமசாமி என்பவரின் ஜீவசமாதிக் கோவில்,திரௌபதியம்மன் கோவில் சிறு தெய்வக்கோவில்களும் செவிட்டு ராமசாமி கோவில் முன் ஜல்லிக்கட்டு நடப்பது இதன் சிறப்பு.
காரிமங்கலத்தில் 18 பட்டியும் ‘’செவிட்டு ராமசாமி கோவில் ‘’ சார்பாக.. ஜல்லிக்கட்டு
குலோத்துங்க சோழனால் காரிமங்கலம் ஒட்டிய சிறு குன்றில் எடுக்கப்பட்ட “ஆருனேஸ்வரர் கோவிலும், பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட ஆட்சியாளர் ஒருவராகிய செவிட்டு ராமசாமி என்பவரின் ஜீவசமாதிக் கோவில்,திரௌபதியம்மன் கோவில் சிறு தெய்வக்கோவில்களும் செவிட்டு ராமசாமி கோவில் முன் ஜல்லிக்கட்டு நடப்பது இதன் சிறப்பு.