Sunday, September 29, 2013
![]() |
| அருள்மிகு எட்டுக்கைஅம்மன் |
பண்ணை குலமக்களின் குலதெய்வம்
அருள்மிகு எட்டுக்கைஅம்மன்
அருள்மிகு
எட்டுக்கைஅம்மன் திருக்கோவில்,
ஸ்ரீ சென்றயபெருமால்
ராக்கி பட்டி
[ Sri Sendraya Perumal Kovil,
ஸ்ரீ சென்றயபெருமால்
ராக்கி பட்டி
[ Sri Sendraya Perumal Kovil,
Rakkipatti,
Salem]
எட்டுக்கை அம்மன் எனும் சிறப்பு
எட்டுக்கை அம்மன் எனும்
சிறப்பு கரங்களினாலேயே காரண பெயர் பெற்று விளங்குகிறது. இது அன்னையின் திருக்கோலம். பராசக்தியின் பல்வேறு வடிவங்களில் கொற்றவை எனும் காளி, துர்க்கை, போன்ற தெய்வங்கள் வட திசையை நோக்கி குடி கொள்பவர்கள். இந்த வகையில் தீமையை அழித்து
நன்மையை நிலை நிறுத்தும் தேவி வடிவங்களில் ஒன்றே அன்னை
எட்டுக்கை அம்மன்.
இது போன்ற மற்ற தெய்வ வடிவங்களில் அமைய பெற்றிருக்கும் அசுரனின் வடிவம் அசுரனை காலால் மிதிப்பது போன்றும், அல்லது நீண்ட சூலாயுதத்தால் சம்ஹாரம் செய்வது போன்றும் அமைந்திருக்கும். ஆனால் , எட்டுக்கை அம்மனின் சிறப்பு அசுரனை அடியோடு சாய்த்து வெற்றி வாகை சூடி அருள் வழங்கும் காட்சியாக உள்ளது.
மேலும் சிவனில் இவள் பாதி என உணர்த்தும் வகையில் இடது கரத்தில் விஸ்மயா ஹஸ்த்தம் எனும் வியப்பினை ஓட்டும் முத்திரையில் அக்னி, வில், மணி, கபாலம் இவைகளையும் , வலது கரத்தில் டமருகம் ( உடுக்கை ), எறி சூலம், கட்கம் ( சிறிய கத்தி ), வேல், இவைகளையும் தனது எட்டு கரத்தில் தாங்கி அருள்பாலிக்கிறாள்.
அன்னையின் வலபுற காதில் மகர குண்டலமும், இடபுற காதில் பத்திர குண்டலமும் அணிந்துள்ளது ஆண், பெண், சரி பாதி என்ற தோற்றத்தை நினைவு கூர்கிறது.
ஜுவாலா கேசம் ( அக்னி கூந்தல் ) கொண்ட அன்னை காளி தேவியின் வடிவமே ஆயினும் பரமஹம்சர் தேவி அன்பின் வடிவமே என்கிறார்.
வீரத்தின் அடையாளமாக அன்னை உத்தங்குடிகா ஆசனம் இட்டு தனது வலது பாதத்தை பீடத்தின் மேலும், இடது பாதத்தை ஊன்றியும் அமைந்தவாறு வடிவமைத்துள்ளது சிற்ப்பியின் கலைத்திறனையும், சாஸ்த்திர ஙுனுக்கத்தையும் நன்கு வெளிப்படுத்துகிறது.

பண்ணைக்குல சிறப்பு :
கொங்கு வெள்ளாளன் ஆட்டுப்பண்ணை ,மாட்டுப் பண்ணைகளை வைத்துப் பாதுகாத்தவர்கள் .
பெரிய நிலத்திற்குரியவன் பண்ணைக்காரன் எனப்பட்டான் .
வயலில் பணி செய்வோன் பண்ணை ஆள் எனப்பட்டான் .
பெருநிலக் கிழாரானவர் பண்ணைக் குலத்தினர் ஆயினர்.
பண்ணைக் குலத்தினர் சோழனுக்கு படைமக்களாக இருந்தனர்.
குளித்தலை வட்டம் ஆந்திப நல்லூரில் பண்ணையார் வாழ்ந்தனர் என்று
வாலசுந்தரக் கவி கூறுவார். இவருக்கு கொங்கு மண்டல சதகம்பாட இந்தப் பண்ணையார் உதவினராம்.
பண்ணைக்கீரை உண்ணார். ஏழூர் , கீரம்பூர், அனுமன் பள்ளி , கரூர் , தும்மங்குறிச்சி, தாழம்பாடி , வாழவந்தி , ஆகிய ஊர்கள் பண்ணைக் குலத்தாரின் காணியூர்களாம்.

கொங்கு என்றால்
தேவர்கள் தேன் சொறிந்த நாடு என பொருள். தலை சிறந்த தமிழகத்தில் சேர,சோழ,பாண்டியர் எனும் உற்ற சகோதரர்கள் ஆட்சியில் சமதர்மம் , ஜனநாயகம், சன்மார்கம் யாவும் தலைத்தோங்கி நின்ற காலத்தில்
ஒரே குலம் ஒருவனே தேவன் என
உலகை படைத்த பார்வதி பரமசிவன் நாமம் பாடி உழவு துறைக்கு முதலிடம் கொடுத்தார்கள்.
மேற்கே திருவிதாங்கூர், கிழக்கே திருவாரூர், வடக்கே திருவேங்கடம், தெற்க்கே திருமதுரை வரை மன்னன் சேரன் தலைமையில் யாவரும் ஒன்று பட்டு திருப்புகழ், தேவார தெய்வ வழிபாடு பட்ட கவிஞர்களுடன் சிற்பிகள் ஒன்றினைந்து ரத, கஜ, துரக, பாதிகளைக் கொண்டு சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் கி.பி. ஆறாம் ஙூற்றாண்டாகிய பொன்னர் சங்கர் ஆட்சியில் அமைக்கப்பட்டது.
சேர மன்னனின் துணை கொண்டு நதிகளுக்கு கரைகளும், கற்களை கொண்டு அணைகள் கட்டினர்கள். காவிரி நதியை தாயாக கொண்டு கொங்கு நாட்டின் சேக்கிழார் வம்ச உழவர் பெருமக்கள் நான்கு லட்சம் பேர் திருவாரூரில் தியாகராஜேஸ்வர் ஆலயம் அமைய ஆவண செய்தார்கள். அங்கு பெரிய தேர் ஓட்டி கோலாட்சி செய்துவந்த கொங்கு சீமான் கொழந்தா கவுண்டர் அவர்களின் மறைவிற்க்கு பின்னர் வட நாட்டிலிருந்து சமன மதத்தினர் எனும் கூட்டம் தமிழகத்தில் ஊடுறுவினார்கள்.
அவர்கள் சாதி, மத வேற்றுமைகளையும், தெய்வ வழிபாட்டு முறைகளையும் மாற்று வழியில் புகுத்தினார்கள். மாச்சர்யங்களை உண்டு செய்தும், மக்களிடையே போர்களம் பூண்டு , நாடு சிதறுண்டு, நாடு சீரழிந்து போய் விட்ட காலமிது.

சடையப்ப வள்ளலின் சொந்த ஊர் திருவெண்ணெய் நல்லூர். சடையப்ப வள்ளல் 12ஆம் நூற்றாண்டில் கொங்கு வேளாளர் குடும்பத்தில் பிறந்தார். இவர் பண்ணை குல வேளாளர் இவரின் சமாதி இன்றும் தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் காணப்படுகிறது.கம்பராமாயணம் கம்பர் இயற்றிய உடன் கம்பர் வரும் போது அவருக்கு நெற்கதிர்வேய்ந்த பந்தலிட்டு இவர் வரவேற்பு அளித்ததால் அவ்வூருக்கு கதிராமங்கலம் என்ற பெயர் வழங்கப்பட்டது. ஈழத்தில் பஞ்சம் வந்தகாலத்தில் தமிழகத்தைச்
சார்ந்த சடையப்ப வள்ளல் என்பார் கப்பல்களில் உணவுப்பண்டங்களை அனுப்பி வைத்தார் என்று வரலாறு சொல்கிறது.
வள்ளல் சடையப்பக் கவுண்டர் கம்பரின் புரவலர். கம்பன் காவியம்
பாடப்பட்ட காலத்தில் சோழப் பேரரசனின் ஆதரவு இல்லாமல் சடையப்ப வள்ளல் ஆதரவுடன்தான் பாடப்பட்டது. அவரைப்
புகழ்ந்துக் கம்பர் 100 பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் தன் கம்பராமாயணத்தில் எழுத, மற்றப் புலவர்கள் ஆயிரத்துக்கு ஒரு பாட்டில் குறிப்பிட்டால் போதும் என்றுக் கூறிவிட, "சடையப்ப வள்ளல் நூற்றில் ஒருவர் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் கூறியபடி அவர் 'ஆயிரத்தில் ஒருவர்' ஆகிறார். அப்படியே செய்கிறேன்." என்று கம்பர் கூறுவார். கம்பராமாயணம் முடி சூட்டுப் படலத்தில் இராமனுக்கு முடிசூட்டும் போது கிரீடத்தை பண்ணை குல வேளளர் மரபினோர் எடுத்து கொடுக்க வஷிஷ்டன் அணிவித்தான் என்றும் கம்பர் கூறுகிறார்.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் கொங்கு வேளாளர் வள்ளல் சடையப்ப கவுண்டரை பெருமிதப்படுத்தும் விதமாக கொங்கு
மங்கல வாழ்த்தை பாடிக்கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
கம்பர் பாடிக்கொடுத்த மங்கல வாழ்த்து கொங்குநாட்டுத் திருமணங்களில்
பாடப்பெறுகிறது.
சடையப்ப வள்ளலை யார் நாடி வந்தாலும்
இல்லையென்று சொன்னது கிடையாது, கேட்பர்களுக்கெல்லாம்
வாரி வாரி வழங்கும் குணம் அவரிடம் இருந்தது. அவர் வீட்டு அருகில் ஒரு பாம்புப் புற்று இருந்தது அந்தப்
புற்றுக்கும் தவறாமல் இவர் பால்
வார்த்து வந்தார். இது போல் தனக்குமில்லாமல் எல்லாவற்றையும் தானம் செய்தபின் ஒரு நாள் அவரிடம் வழங்க ஒன்றுமே இல்லாத
நிலையும் ஏற்பட்டது. இந்த நேரத்தில் நம் இறைவன்
அவரைச்சோதிக்க விரும்பினார்.
சோதிக்கும் நேரமும் வந்தது. அவர் வீட்டு வாசல் கதவு தட்டப்பட்டது. மிகவும் ஆவலுடன் சடையப்ப வள்ளல் ஓடிப்போய்ப் பார்க்க, இரண்டு புலவர்கள் தங்கள் புலமையைக் காட்டியபடி சடையப்ப வள்ளர் மேல் மிக அழகாகப் பல பாடல்களைப் புனைந்தனர். 'அவர்களுக்குப் பரிசாக எதாவது தர வேண்டுமே, என்னிடம் தான் ஒன்றுமில்லையே' என்று ஏங்கி அவர்களை அமர வைத்து வீட்டின் பின் புறமிருந்த பாம்புப்புற்றின் அருகே சென்றார். தன் கையை அந்தப் புற்றுக்குள் விட்டார். உள்ளே இருந்தது ஒரு நாகம். அந்த நாகம் சடைய்யப்பரின் கையில் ஒரு மாணிக்கத்தைக் கக்கியது. மனமகிழ்ந்து ஓடிப்போய் ஒரு புலவருக்குப் பரிசாக அதை அளித்தார். ஆனால் மறு புலவருக்கு என்ன செய்வது? எதைப் பரிசாகக் கொடுப்பது? மனம் வெதும்பிப்போனார். செய்வதறியாது திகைத்தார். நேராக அந்தப் புற்றுக்குள் கையைவிட்டு பாம்புக்கடிப்பட்டு இறந்து போகலாம் என்று எண்ணித் திரும்பவும் புற்றின் பக்கம் ஓடி அதற்குள் கையை விட்டார்.
உள்ளே இருந்த நாகம் பார்த்தது. இத்தனை நாள் விடாமல் நம்க்குப்பால் ஊற்றி வருகிறான் இவன். இவனைக் கடிப்பதா?" என்றெண்ணித் தன்னிடமிருந்த மாணிக்கக்கல்லை அவரது கையில் கக்கிவிட்டு இறந்து போனது. தனக்குப்பால் ஊற்றிய புண்ணியவானுக்காகத் தன் உயிரையும் தியாகம் செய்தது. அப்படியே அசந்துபோய் நின்றார் சடையப்பவள்ளல். புலவர்கள் மறைந்து போக இறைவன் காட்சி கொடுத்தார்.

"உன்னைச் சோதிக்கவே நான் வந்தேன், இழந்த செல்வம் உனக்குத் திரும்பிக் கிடைகட்டும். அமோகமாக வாழ்வாயாக"
என்று ஆசிகள் வழங்கினார். பாம்புக்கும் மோக்ஷம்
கிடைத்துவிட்டது.
பண்ணை
குலத்தார்களின் ஆட்சியை நிலைபெறசெய்தும் சைவ சித்தாந்த முறைபடி மட்டுமே வழிபாடு செய்ய
அருளாசி வழங்கிய அன்னை எட்டுக்கை அம்மன் எட்டி மர விருச்சட்தின் புற்றிலேயே குடி
கொண்டு விட்டாள்.
வணக்கம் கொங்கு சொந்தங்களே, பன்னை கூட்ட பங்காளிகளே!!!
இந்த புதிய வலைத்தளம், நமது பன்னை கூட்ட பங்காளிகள் மற்றும் கொங்கு சொந்தங்களின் வரலாறு, குல தெய்வங்கள், மற்றும் ஏனைய தகவல்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு தள மேடையாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
இந்த வலைதளத்தின் முதல் பதிவு மூலமாக, அவர்களுக்கெல்லாம் நன்றி சொல்லி, அவர்களது முயற்சிக்கு நாங்கள் என்றும் துணை நிற்போம் என்பதை கூறிக்கொள்கிறோம்.
இந்த வலை தளத்தில் தெரிந்த மற்றும் தெரியாத பல தகவல்கள் இடம் பெரும். அது மட்டுமல்லாது, நமது குல தொழிலான விவசாயம் மற்றும் அது சார்ந்த தகவல்களை அளிக்க உள்ளோம். இது, நமது சமூகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
“சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை”
உலகில்
எண்ணற்ற தொழில்கள் நடந்து வந்தாலும் ஏர்த்தொழிலாம் விவசாயத்தின் பின்னால்
தான் இந்த உலகம் இயங்குகின்றது. விவசாயம் தான் உலக ஜீவராசிகள்
அனைத்திற்கும் உயிர் ஊட்டுகிறது.
என்ற வள்ளுவர் வாக்கு என்றும் பொய்க்காது.
அதற்கு கொங்கு சொந்தங்கள் அனைவரும் முயற்சி எடுப்போம் என்று, எங்களின் இந்த முதல் பதிவை முடிக்கிறோம். மீண்டும், அடுத்த பதிவில் பல பயனுள்ள தகவல்களோடு சந்திப்போம்.
வணக்கங்களுடன்,
பன்னை கூட்ட பங்காளிகள்.
Subscribe to:
Comments (Atom)