Sunday, September 29, 2013

வணக்கம் கொங்கு சொந்தங்களே, பன்னை கூட்ட பங்காளிகளே!!!
இந்த புதிய வலைத்தளம், நமது பன்னை கூட்ட பங்காளிகள் மற்றும் கொங்கு சொந்தங்களின் வரலாறு, குல தெய்வங்கள், மற்றும் ஏனைய தகவல்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு தள மேடையாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
நமது சமூக பழக்க வழக்கங்களை பலர் மறந்து கொண்டு இருக்கும் நிலையிலே, நமது கொங்கு இளைஞர்கள் சிலர் அத்தகைய தகவல்களை சேகரித்து நமது சொந்தங்கள் மத்தியிலே பரப்பும் முயற்சியில் இறங்கி அதிலே வெற்றியும் கண்டு கொண்டுள்ளார்கள்.
இந்த வலைதளத்தின் முதல் பதிவு மூலமாக, அவர்களுக்கெல்லாம் நன்றி சொல்லி,  அவர்களது முயற்சிக்கு நாங்கள் என்றும் துணை நிற்போம் என்பதை கூறிக்கொள்கிறோம்.
இந்த வலை தளத்தில் தெரிந்த மற்றும் தெரியாத பல தகவல்கள் இடம் பெரும். அது மட்டுமல்லாது, நமது குல தொழிலான விவசாயம் மற்றும் அது சார்ந்த தகவல்களை அளிக்க உள்ளோம். இது, நமது சமூகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
“சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை”
உலகில் எண்ணற்ற தொழில்கள் நடந்து வந்தாலும் ஏர்த்தொழிலாம் விவசாயத்தின் பின்னால் தான் இந்த உலகம் இயங்குகின்றது. விவசாயம் தான் உலக ஜீவராசிகள் அனைத்திற்கும் உயிர் ஊட்டுகிறது.
என்ற வள்ளுவர் வாக்கு என்றும் பொய்க்காது.
அதற்கு கொங்கு சொந்தங்கள் அனைவரும் முயற்சி எடுப்போம் என்று, எங்களின் இந்த முதல் பதிவை முடிக்கிறோம். மீண்டும், அடுத்த பதிவில் பல பயனுள்ள தகவல்களோடு  சந்திப்போம்.
 
வணக்கங்களுடன்,
பன்னை கூட்ட பங்காளிகள்.

No comments:

Post a Comment